பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் ஸ்மித்!

தென்னாப்பிரிக்காவில் தொடங்க இருக்கும் டி20 குளோபல் லீக் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் பயிற்சியாளராக, கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜாவேத் அஃப்ரிடியுடன் கிரேம் ஸ்மித்


ஐ.பி.எல் தொடரைப் போலவே  எட்டு அணிகள் பங்கேற்கும் டி20 குளோபல் லீக் தொடரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. வரும் நவம்பர் மாதம் தொடங்கும் இந்தத் தொடரில் பங்கேற்கும் கேப்டவுன் நைட்ரைடர்ஸ் அணியை, பாலிவுட் பிரபலம் ஷாரூக் கான் விலைக்கு வாங்கியுள்ளார். இந்தத் தொடரில் பங்கேற்கும் பெனோனி ஜால்மி அணியின் தலைமைப் பயிற்சியாளராக கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். துணைப் பயிற்சியாளராக ஜெஃப்ரி டோயானா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்கும் பெஷாவல் ஜால்மி, அணியின் உரிமையாளரான ஜாவேத் அஃப்ரிடியே இந்த அணிக்கும் உரிமையாளர். கடந்த 2014-ம் ஆண்டில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஸ்மித், முதன்முறையாக பயிற்சியாளராகப் பணியாற்ற இருக்கிறார். தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித், அந்த அணிக்காக 117 டெஸ்ட், 197 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.  அந்தத் தொடரில் பங்கேற்கும் ஸ்டெல்லன்போஸ் மோனார்க்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக  ஸ்டீபன் ஃபிளமிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!