கிரிக்கெட்டில் இருந்து கங்குலி முழு ஓய்வு!

பிப்.7,2011

எல்லா வகை கிரிக்கெட்டில் இருந்தும் முன்னாள் இந்திய அணிக் கேப்டன் சவுரவ் கங்குலி ஓய்வு பெற்றார்.

கட்ந்த 2008 ஆம் ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கங்குலி அறிவித்தார்.

ஆயினும், மேற்கு வங்க அணிக்காக அவர் விளையாடி வந்தார்.

அதேபோல், கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்.

ஆனால், இம்முறை அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

இந்தச் சூழலில், எல்லா விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கங்குலி இன்று அறிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!