உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிச் சுற்றில் சிந்து, ஶ்ரீகாந்த்!

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சிந்து மற்றும் ஶ்ரீகாந்த் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

சிந்து - ஶ்ரீகாந்த்


உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்துவும், ஹாங்காங்கின் சேங் ங்கான் யி மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் சுற்றை சேங் கைப்பற்றினார்.


இதையடுத்து, இரண்டாவது சுற்றின் ஆரம்பத்திலும் சேங்கே ஆதிக்கம் செலுத்தினார். ஆனால், சிந்து தொடர்ந்து போராடினார். இதைத்தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது சுற்றை சிந்து கைப்பற்றினார். இதனால், 19-21 23-21 21-17 என்ற செட் கணக்குகளில் சிந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் சிந்து காலிறுச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 


அதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் 18-ம் நிலை வீரரான ஆன்டன்சனுடன், இந்தியாவின் ஶ்ரீகாந்த் மோதினார். இந்தப் போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஶ்ரீகாந்த் 21-14 21-18 என்ற செட் கணக்குகளில் வெற்றி பெற்றார். காலிறுதியில் அவர் உலகின் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வானுடன் மோத உள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!