வெளியிடப்பட்ட நேரம்: 05:05 (25/08/2017)

கடைசி தொடர்பு:05:05 (25/08/2017)

பாகிஸ்தான் - வேர்ல்ட் வெலன் அணிகள் மோதும் டி-20 போட்டிகள் அறிவிப்பு! #PAKvsWXI

2009-ம் ஆண்டில் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் நாடுகள் பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட மறுத்தன. பாகிஸ்தான் அணி கிரிக்கெட் நிர்வாகமும், தங்களது போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்திக்கொண்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதைத் தவிர்த்துக்கொண்டிருந்தது. சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றபிறகு, 'இனியாவது எங்கள் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட வாருங்கள்' என அழைப்பு விடுத்தார்கள். 

பாகிஸ்தான் - வேர்ல்ட் லெவன் 2017

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், அந்நாட்டில் இருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த கேள்விகளைக் களையும் விதமாகவும், பல்வேறு தொடர் முயற்சிகளை எடுத்து வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். அதன் ஒரு முயற்சியாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட 'வேர்ல்ட் லெவன்' அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று சர்வதேச டி-20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக, பல நாடுகளும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து நம்பிக்கையுடன்  விளையாடுவதற்கு  வழி வகை செய்யும் விதமாக இப்போட்டிகள் அமையும் என்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். இத்தொடரின் அறிவிப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷர்பராஸ் அகமது. உலக லெவன் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலரும் தங்களது ஆர்வத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் - வேர்ல்ட் லெவன் 2017

பாகிஸ்தானுடன் விளையாடவிருக்கும் உலக லெவன் அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணியின் தற்போதைய கேப்டன் டு பிளெஸிஸ் 'உலக லெவன்' அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். போட்டிகள் செப்டம்பர் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

உலக லெவன் அணி :

டூ பிளெஸிஸ் (தென் ஆப்பிரிக்கா), அசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா), சாமுவேல் பத்ரி (வெஸ்ட் இண்டீஸ்), ஜார்ஜ் பெய்லி (ஆஸ்திரேலியா), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), பென் கட்டிங் (ஆஸ்திரேலியா), கிராண்ட் எலியாட் (நியூசிலாந்து), தமீம் இக்பால் (வங்காளதேசம்), டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா), மோர்னே மோர்கல் (தென் ஆப்பிரிக்கா), டிம் பைன் (ஆஸ்திரேலியா), திசாரா பெரேரா (இலங்கை), இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா), டேரன் சமி (வெஸ்ட் இண்டீஸ்).

நீங்க எப்படி பீல் பண்றீங்க