மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ!

ரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும்  தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும்.  இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். 

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட்  அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ்  லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். 

இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் அர்ஜென்டினா மற்றும்  பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்சியும் இருந்தார். இருந்தாலும் ரொனால்டோ, மெஸ்சியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விருதினை வென்றார். மெஸ்சி இந்த விருதினை இரண்டு முறை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் பிரிவில் இந்த விருதினை நெதர்லாந்து அணியின் மார்டேன்ஸ் என்ற வீராங்கனை பெற்றார். இவர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரை நெதர்லாந்து வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். அந்த  தொடரின் சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!