வெளியிடப்பட்ட நேரம்: 07:49 (26/08/2017)

கடைசி தொடர்பு:07:51 (26/08/2017)

JK டயர்ஸ் FMSCI தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் முடிவுகள்!

ஆகஸ்ட் 5 மற்றும் 6-ம் தேதிகளில் யூரோ JK 17, LGB ஃபார்முலா 4 மற்றும் சுஸுகியின் ஜிக்சர் கப், ரோடு டு ரூக்கிஸ் கப் ஆகிய நான்கு ரேஸ்களின் ரவுண்ட்-2, கோவையில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்றது.
இந்த நான்கு ரேஸ்கள்போலவே விறுவிறுப்பான 20 ஹைலைட்ஸ் இதோ...

யூரோ JK 17:

JK டயர்ஸ்

• கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற முதல் சுற்றின் வெற்றியாளரான விஷ்ணு பிரசாத், ரவுண்ட் 2-வின் முதல் நாள் ரேஸை முதல் இடத்திலிருந்து தொடங்கினார். ஆனால், துரதிர்ஷ்ட்வசமாக 14-ம் லேப்பில் அவரது காரின் இன்ஜின் நின்றதால், அவரால் ரேஸை நிறைவுசெய்ய முடியவில்லை. இதைப் பயன்படுத்தி, நயன் சட்டர்ஜி, ஆஸ்திரலியாவைச் சேர்ந்த ரிக்கி கப்போ மற்றும் அணிந்தித் ரெட்டி ஆகியோர் முறையே 1, 2, 3 ஆகிய இடங்களைப் பிடித்தனர். இதனால், ரிக்கி கப்போ இந்தியாவில் முதன்முதலாக போடியம் ஏறினார்.

• இரண்டாவது ரேஸ் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. ஏனென்றால், ‘ரிவர்ஸ் க்ரிட்’ எனப்படும் இடங்களை தலைகீழாக மாற்றி அமைத்து ரேஸை தொடங்கும் முறை பின்பற்றபட்டது. பிட் லேனிலிருந்து கடைசியாகத் தொடங்கிய விஷ்ணு பிரசாத், ஒவ்வொன்றாக முந்திச் சென்று இறுதியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

• 2-ம்  நாள் முதல் ரேஸின் இடவரிசையைத் தகுதிச் சுற்றின் நேரப்படி அமைத்தனர். இதனால், விஷ்ணு பிரசாத் முதல் இடத்திலிருந்து தொடங்கினார். அந்த முதல் இடத்தை, கடைசி வரைக்கும் தக்கவைத்தார். இறுதியில் விஷ்ணு பிரசாத், அணிந்தித் ரெட்டி மற்றும் நயன் சட்டர்ஜி ஆகியோர் முறையே 1, 2, 3 இடங்களைக் கைப்பற்றினர்.

• 2-ம் நாள் இரண்டாவது ரேஸின் முடிவில் ரிக்கி கப்போ, அணிந்தித் ரெட்டி மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோர் முறையே 1, 2, 3 இடங்களைப் பிடித்தனர்.

• இறுதியாக ரவுண்ட் 2 முடிவில், 64 புள்ளிகளுடன் விஷ்ணு பிரசாத் முதல் இடத்திலும், 1 புள்ளி வித்தியாசத்தில் 63 புள்ளிகளுடன் அணிந்தித் அவரை மிக நெருக்கமாகப் பின்தொடர்கிறார். 54 புள்ளிகளுடன், நயன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

LGB ஃபார்முலா 4:

டயர்

• முதல் நாள் நடந்த தகுதிச் சுற்றில் தில்ஜித், சித்தேஷ் மண்டூடி, ரோஹித் கண்ணா, ராகுல் ரங்கசாமி முறையே 1, 2, 3, 4 இடங்களைப் பிடித்தனர்.

• முதல் நாள் ரேஸின் முடிவில் சித்தேஷ் மண்டூடி -  ரோஹித் கண்ணா முதல் இரண்டு இடங்களையும், சென்னையைச் சேர்ந்த ராகுல் ரங்கசாமி, சரண் விக்ரம் மற்றும் விஷ்ணு பிரசாத் முறையே 3, 4, 5 இடங்களையும் கைப்பற்றினர். இதில் விஷ்ணு பிரசாத் 14-ம் இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கினார்.

• இரண்டாம் நாள் ரேஸ், ஆக்‌ஷன் படம் பார்க்கும் உணர்வைத்  தந்தது. முதல் இரண்டு லேப்களுக்கும் சேஃப்டி கார் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. 4-ம் லேப்பில் நடந்த விபத்தால் சிவப்புக்கொடி காட்டி ரேஸ் நிறுத்தப்பட்டது.

• 5-ம் லேப் ஆரம்பிக்கும் முன் அனைத்து கார்களும் கிரிடில் ஒன்றின்பின் ஒன்றாக நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது ரேஸ் வீரர்களிடையே வரிசை குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக ட்ராக்கிலேயே ரேஸ் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சில நிமிடங்கள் பரபரப்பு நீடித்தது.

• இறுதியில் விஷ்ணு பிரசாத், ராகுல் ரங்கசாமி, கெவின் பெரேரா ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

ஜிக்சர் கப்:

JK டயர்ஸ்

• முதல் ரேஸில் முதலாவதாகத் தொடங்க தகுதிபெற்ற மால்சாம்டாங்களியானா 2-ம் லாப்பிலேயே விபத்தின் காரணமாக ரேஸில் இருந்து விலகினார்.

• 7-வது லேப்பில் கார்த்திக் மடேட்டி விபத்தில் சிக்கியதால், சிவப்புக் கொடி காட்டி ரேஸ் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக 10 லேப் ரேஸ் 7-வது லேப்புடன் முடிக்கப்பட்டது.

• இந்த ரேஸில் ஜோசப் மத்தியூ, சஞ்சீவ் மாத்ரே, லல்மாவிபுயா முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.

• முதல் நாள் ரேஸில் விட்டதைப் பிடிக்க இரண்டாம் நாள் ரேஸில் புயல் வேகத்தில் பைக்கை ஓட்டினார் மால்சாம்டாங்கிளியானா. ஒவ்வொரு லேப்பிலும் வேகமாக முன்னேறி சென்று இரண்டாம் இடத்தில் ரேஸை நிறைவுசெய்தார்.

• இந்த ரேஸிலும் சென்னையைச் சேர்ந்த ஜோசப் மத்தியூ முதலாவதாக வந்தார். சஞ்சீவ் மாத்ரே மூன்றாவது இடம்பிடித்தார்.


ரோடு டு ரூக்கிஸ் கப்:

JK டயர்ஸ்

• இது 12-16 வயதுடையவர்களுக்காக, சுஸுகியால் ஜிக்சரில் நடத்தப்படுகிறது. இதன் வெற்றியாளர் ஸ்பெயினில் நடக்கும் motoGP ரூக்கிஸ் கப் தகுதிச் சுற்றுக்கு தேர்வுபெறுவர்.

• மிஸோரமைச் சேர்ந்த லால்நுண்சங்கா, லால்ருசைலா முதல் மற்றும் இரண்டாம் இடத்திலிருந்தும், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஜேடன் குணவர்தனே மற்றும் சென்னையைச் சேர்ந்த வருண் மூன்று மற்றும் நான்காம் இடத்திலிருந்து ரேஸைத் தொடங்கினர்.

• 8 லேப் நடந்த இந்த ரேஸில் ஜேடனுக்கும் லால்ருசைலாக்கும் முதல் இடத்துக்கான போட்டி இறுதிவரை நிலவியது. 0.010 விநாடி முன்னிலையில் ஜேடன் முதல் இடம் பிடிக்க, லால்ருசைலா, லாநுண்சங்கா மற்றும் வருண் ஆகியோர் முறையே 2, 3, 4 இடங்களைப் பிடித்தனர்.

• இரண்டாம் நாள் ரேஸில் ஆரம்பம் முதலே சீறி பாய்ந்த ஜேடன், 3 விநாடி முன்னிலையில் முதல் இடம் பிடித்தார். லால்ருசைலா, வரூண் மற்றும் லாநுண்சங்கா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.

• தற்போது 38 புள்ளிகள் பெற்று லால்ருசைலா சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.