உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிந்து!

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. 
மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பி.வி. சிந்துவும், சீனாவின் சன் யூ மோதினர். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-14, 21-9  என்ற நேர்  செட் கணக்குகளில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம், அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் அவர் சீனாவின் சென் யூஃபியுடன் மோத உள்ளார். சிந்து உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், ஏற்கெனவே இரண்டு முறை வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்நிலையில், அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம், தற்போது சிந்துவுக்கு உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது. 

அதேபோல, ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் மற்றும் கொரியாவின் சன் வான் மோதினர். இதில் 14-21, 18-21 என்ற செட் கணக்குகளில் சன் வான் வெற்றி பெற்றார். இந்தத் தோல்வியின் மூலம் ஶ்ரீகாந்த் தொடரில் இருந்து வெளியேறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!