தொடரை கைப்பற்றுமா இந்தியா..? இந்திய-இலங்கை அணிகள் இன்று பலபரீட்சை!

இந்திய- இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 3-0 என்று முழுவதுமாக வென்ற கோலி தலைமையிலான இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளை வென்று விட்ட நிலையில் இன்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முயற்சிக்கும். 

இந்த தொடரை பொறுத்த வரை இந்திய அணி பலமான அணியாக தான் உள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் என்று இரண்டு பிரிவிலும் இந்திய அணி இலங்கையை விட சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டகாரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தருகின்றனர். கடந்த போட்டியில் நடுவரிசை  வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த போதும் தோனி மற்றும் புவனேஷ்வர் குமாரின் நேர்த்தியான ஆட்டத்தினால் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.

இலங்கை அணியை பொறுத்த வரை அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும். பந்துவீச்சின் போது, அதிக நேரம் எடுத்து கொண்ட காரணத்திற்காக கேப்டன் தரங்காவிக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால், இன்றைய போட்டிக்கு கபுகேத்ரா கேப்டனாக செயல்படுவார். அதே போன்று அணியில் அனுபவ வீரர்களான திரிமன்னே மற்றும் தினேஷ் சன்டிமல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடரை இழந்து விட கூடாது என்று இலங்கை கடுமையாக முயற்சிக்கும். 
இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!