புதிய சாதனையை நோக்கி தோனி!

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி பல்லகலேவில் இன்று நடக்கிறது.

மகேந்திரசிங் தோனி


ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்று முன்னிலை பெற்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்லும் முனைப்புடன் இந்த போட்டியில் களம் காண்கிறது. அதேநேரம், டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இலங்கை அணி, ஒருநாள் தொடரையாவது சொந்தமண்ணில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. 

தாமதமாக பந்துவீசிய காரணத்தால் இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்காவுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கபுகேதரா தலைமையில் இலங்கை அணி களமிறங்குகிறது. தரங்காவுக்குப் பதிலாக மாற்றுவீரராக தினேஷ் சண்டிமால் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை 99 வீரர்களை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சங்ககராவின் சாதனையை, அந்த அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் சமன் செய்தார். இந்த போட்டியில் ஒரு வீரரை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தால், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 பேரை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை தோனி படைப்பார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!