Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர் தோல்வி... மைதானத்துக்குள் வாட்டர் பாட்டில்களை எறிந்த இலங்கை ரசிகர்கள்!

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஒரு நாள் தொடர், இலங்கையில் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில், மூன்றாவது ஒரு நாள் போட்டி, பல்லேகலேவில் இன்று நடந்தது. டாஸ்வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. 

இலங்கை ரசிகர்கள்


அந்த அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, லஹிரு திருமானே மட்டும் நிலைத்து நின்று ஆடினார். திருமானே 80 ரன்களில் வெளியேறினார். இதனால், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, பும்ரா ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாண்ட்யா, அக்சர் பட்டேல், கேதர் ஜாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.


இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஒருகட்டத்தில், 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மா தோனி இணை நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ரோஹித் ஷர்மா சதம் அடித்து அசத்த, தோனி அரை சதம் அடித்தார்.

தோனி


வெற்றியின் விளிம்பில் இந்தியா இருந்தபோது, இலங்கை ரசிகர்கள் அதிருப்தியில் வாட்டர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசினர். அதேபோல, தோல்வியை ஏற்க முடியாமல் ஆரவாரம் செய்தனர். இதனால், போட்டி சற்று நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. இதனிடையே, இலங்கை ரசிகர்கள் தொடர்ந்து வாட்டர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசினர். இதையடுத்து, தோனி மைதானத்திலேயே அசந்து படுத்துவிட்டார். இதன் காரணமாக, இலங்கை ரசிகர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் நெட்டிசன்கள், தோனியின் ஃபோட்டோவையும் ட்ரெண்ட் ஆக்கினர்.

 மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 45.1 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்து இந்திய அணி இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரோஹித் ஷர்மா 124 ரன்களுடனும், தோனி 67 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement