வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (29/08/2017)

கடைசி தொடர்பு:18:45 (29/08/2017)

சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைய என்ன காரணம்?- மனம் திறந்த பி.வி.சிந்து

இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனைகளில் ஒருவரான பி.வி.சிந்து சமீபத்தில் நிறைவடைந்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார். இந்தியர்களுக்கு பேரிடியாக அமைந்த இந்தத் தோல்விகுறித்து பி.வி.சிந்து தற்போது மனம் திறந்து பேசியுள்ளார்.

பி.வி.சிந்து

கடந்த 21-ம் தேதி தொடங்கிய உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் 27-ம் தேதி நடந்தது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஜப்பானின் ஒகுஹாராவும் மோதினர். ஒரு மணி நேரம் 49 நிமிடங்கள் சென்ற இந்த போட்டியின் முடிவில் சிந்து, 21-19, 20-22, 22-20 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இதையொட்டி இன்று பேசிய சிந்து, 'உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, மிகச் சிறந்த போட்டிக்கு ஒரு உதாரணம். அன்று வெற்றி யாருக்கு வேண்டுமானால் கிட்டி இருக்கலாம். அந்த ஆட்டத்தின் முதலில் இருந்தே ஒவ்வொரு பாய்ன்ட் எடுக்கவும் மிக நீண்ட நேரமானது. அதில் என்னால் முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தினேன். அந்தப் போட்டியில் ஒவ்வொரு செட்டும் மிகக்  கடுமையாகவே  இருந்தது. அது என் நாள் இல்லை' என்று மனம் திறந்துள்ளார்.