சரித்திரம் படைத்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி...! சொந்த மண்ணில் வீழ்ந்தது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்கிலி மைதானத்தில் 25-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 258 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 427 ரன்களைக் குவித்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஷேய் ஹோப் 147 ரன்களைக் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி 490 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 321 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களைக் குவித்து வெற்றிபெற்றது. அதனால், 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ஷேய் ஹோப் 118 ரன்களைக் குவித்தார். அவர் இரண்டு இன்னிங்ஸிலும் நூறு ரன்களைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!