பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை!

சூதாட்டப் புகாரில் சிக்கிய பாகிஸ்தான் வீரர் சர்ஜீல் கானுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

சஜ்ரீல் கான்


ஐ.பி.எல் போன்று நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அஸ்கட் ஹைடர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு நடத்திய விசாரணையில் சர்ஜீல் கான், காலித் லத்தீஃப் மற்றும் ஷாஜைப் ஹஸன் ஆகியோர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இரண்டாவது தொடர் கடந்த பிப்ரவரியில் துபாயில் நடந்தது. இஸ்லாமாத் யுனைடைட் அணிக்காக விளையாடிய சர்ஜீல் கான், பெஷாவர் ஜால்மி அணிக்கெதிரான போட்டியில் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மேட்ச் பிக்ஸிங் புக்கிகள் கூறியபடியே அவர் ஆட்டமிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதில், சர்ஜீல் கான் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதில், இரண்டரை ஆண்டுகள் அவர் முழுவதுமாக எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க முடியாது. பின்னர், தண்டனைக் காலம் நிறைவடையும்வரை அவர் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!