மூன்று விக்கெட்டுகளுடன் கவுன்டி பயணத்தைத் தொடங்கிய அஷ்வின்!

இங்கிலாந்து உள்ளூர் தொடரான கவுன்டி கிரிக்கெட் தொடரில், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் வோர்செஸ்டர்ஷைர் அணிக்காக களமிறங்கினார். 


முதன்முறையாக இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார். முதல் போட்டியில் கிளோசெஸ்டர்ஷைர் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் 29 ஓவர்கள் பந்துவீசிய அவர் 94 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான புஜாராவின் அணியான நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்கு எதிராக அஷ்வினின் வோர்செஸ்டர்ஷைர் அணி எதிர்கொள்கிறது. 

தற்போது நடந்துவரும் இலங்கை அணிக்கெதிரான தொடரில் அஷ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்று வருகிறார். இலங்கை தொடருக்கு அடுத்தபடியாக நடைபெற உள்ள ஆஸ்திரேலிய தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், அவர் நாடு திரும்புவார் என்று தெரிகிறது. சிறுவயது முதலே கவுன்டி தொடரில் பங்கேற்க வேண்டும் என்பது கனவு என்று கூறியுள்ள அஷ்வின், பந்துவீச்சாளர்களுக்கான சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!