வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (30/08/2017)

கடைசி தொடர்பு:18:10 (30/08/2017)

'தென்னாப்பிரிக்காதான் முதல் சாய்ஸ்!' - களத்துக்குத் திரும்பிய டிவில்லியர்ஸ்

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், சில வாரங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொண்டார். இதையடுத்து, அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என்று கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம் பேக் கொடுக்க உள்ளார் டிவில்லியர்ஸ்.

டிவில்லியர்ஸ்

தன் கிரிக்கெட் பயணத்தைத் திரும்ப ஆரம்பிப்பது குறித்து டிவில்லியர்ஸ், 'இந்த ஓய்வு எனக்கு ஒரு மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளித்துள்ளது. மீண்டும் களத்தில் இறங்க ஆர்வமாக உள்ளேன்' என்றவரிடம், 'நிறைய பேர் தற்போதெல்லாம் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறார்களே' என்ற கேள்விக்கு, 'என்னைப் பொறுத்தவரையில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவதுதான் முதல் விருப்பம். அதன் பிறகுதான் எதுவாக இருந்தாலும். அதைப் போன்றுதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து கிரிக்கெட் விளையாட வரும் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஐ.பி.எல் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாகவும். இந்தியாவுக்கு வருவது என்பது அதைவிட சந்தோஷத்தைத் தரும் விஷயம் என்றாலும், தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடுவதுதான் முக்கியம்' என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.