300 வது ஒருநாள் போட்டியை நோக்கி 'தல' தோனி..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, இலங்கையுடன் நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதன் மூலம் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்ற பெருமையைப் பெறப்போகிறார்.

மகேந்திர சிங் தோனி

இலங்கைக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் மற்றும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் உள்ள நிலையில், ஒருநாள் தொடரிலும் இலங்கையை ஒயிட் வாஷை செய்யும் நோக்கில் உள்ளது இந்தியா. இந்நிலையில், தோனி, நான்காவது போட்டியில் விளையாடுவதன் மூலம் 300 ஒருநாள் போட்டிகளை விளையாடிய தகுதியைப் பெறுவார். இதற்கு முன்னர், இந்தியா சார்பில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மட்டும்தான் 300 போட்டிகளுக்கு மேலே விளையாடியுள்ளனர். இந்தத் தொடரில் ஃபார்மில் உள்ள தோனி, இந்தப் போட்டியிலும் சாதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!