ஆஸ்திரேலியாவுடன் அதிரடி: முதல் இடத்துக்கு முன்னேறினார் ஷாகிப்

வங்கதேசம் அணி கிரிக்கெட்டில், அவ்வப்போது பெரிய அணிகளைத் தோற்கடித்து அதிர்ச்சிக் கொடுக்கும். இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என்று எந்த அணிகளும் அதிலிருந்து தப்பியதில்லை. குறிப்பாக, சொந்த மண்ணில் புலி பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது.

ஷாகிப் அல் ஹசன்


இதனிடையே, ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முதலே, அந்த அணி ஆஸ்திரேலியாவுக்குக் கடும் சவால் அளித்து வந்தது. அந்த ஆதிக்கத்தை கடைசி வரை செலுத்திய வங்கதேச அணி, போட்டியில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக வீழ்த்தி, வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது வங்கதேசம்.

வங்கதேசத்தின் வெற்றிக்குக் கடுமையாக உழைத்தவர் ஷாகிப் அல் ஹசன். முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் எடுத்த ஷாகிப் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளைப் கைப்பற்றி, வெற்றிக்கு வித்திட்டார். இதனால், ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில், ஆல் ரவுண்டருக்கான தரவரிசையில் ஷாகிப் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே, எங்களைச் சொந்த மண்ணில் வீழ்த்த முடியாது என்று ஷாகிப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!