300 போட்டிகளும் தோனியின் அந்த 10 சாதனைகளும்!

நெருக்கடி நேரங்களில் தனக்கே உரிய ஸ்டைலில் அதிரடி காட்டி, அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து பதிலடிகொடுப்பதுதான் தோனியின் வழக்கம். அதை, மீண்டும் இலங்கைத் தொடரில் நிரூபித்துள்ளார் தோனி. இலங்கைத் தொடருக்கு முன்பு, தோனிகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களே கமென்ட் அடித்தார்கள். அவர்கள் அனைவரையும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய ஒரு சூழலை தோனி ஏற்படுத்திவிட்டார்.

தோனி


300 போட்டிகள் முடிவடைந்த பிறகும், தனது சாதனை வேட்டைகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார். மிஸ்டர் கூல்... நேற்றைய போட்டியில் 49 ரன்கள், மூன்று கேட்ச், ஒரு வெற்றிகரமான டி.ஆர்.எஸ் ரிவ்யூ என்று அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, 300-வது போட்டியை ஸ்பெஷலாக்கியுள்ளார். குறிப்பாக, 'எங்களுக்கு எப்போதுமே நீங்கள்தான் கேப்டன்' என்று கோலியே புகழாரம் சூட்டினார். 300 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட்டில் தோனி வசம் உள்ள 10 சாதனைகளின் லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

தோனி

* கிரிக்கெட்டில் (உலகக் கோப்பை, 20/20 உலகக் கோப்பை, சாம்பியன் ட்ராபி) என்று மூன்று வகையான ஐ.சி.சி தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே கேப்டன்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், மொத்தம் 331 போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே வீரர்.

*  ஒரு நாள் போட்டியில், வெற்றிகரமான  ரன் சேஸிங்கில் தோனியின் சராசரி 101.84.

* ரன் சேஸிங்கின்போது, ஒன்பது போட்டிகளை சிக்ஸர் மூலம் ஃபினிஷிங் செய்தவர்.

* 6 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன்கள் அடித்தது (4,601).

* ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களைத் தெறிக்கவிட்ட ஒரே இந்திய வீரர்.

* இலங்கையுடன் அவர் அடித்த 183 ரன்தான், தற்போதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்.

* ஒருநாள் கிரிக்கெட்டில், வெற்றிகரமான ரன்சேஸிங்கின்போது, 40 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர்  (737).

* ஒருநாள் கிரிக்கெட்டில், அதிக நாட் அவுட் என்ற சாதனை. நேற்றைய போட்டியையும் சேர்த்து, மொத்தம் 73 போட்டிகளில் தோனி நாட் அவுட்.

இன்னும் பல நாட் அவுட்களையும், ஃபினிஷிங்களையும் கொடுக்க வாழ்த்துகள் மிஸ்டர் கூல்..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!