தோனியின் 300-வது ஒருநாள் போட்டியில் நெகிழ்ந்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 300-வது ஒருநாள் போட்டியை ஒட்டி, அவருக்கு கேப்டன் கோலி நினைவுப் பரிசு வழங்கினார். 


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்  300-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இதையொட்டி, போட்டிக்கு முன்னதாக பிளாட்டினம் பேட் ஒன்றை தோனிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் கோலி. அப்போது பேசிய கோலி, ’இங்குள்ள 90 சதவிகித வீரர்கள், உங்கள் தலைமையிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானோம்.

இந்த நினைவுப் பரிசை உங்களுக்கு அளிப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நீங்கள்தான் எங்களுக்கு எப்போதுமே கேப்டன்’ என்று கூறி நெகிழ்ந்தார். அந்தப் போட்டியில் களமிறங்கிய தோனி, ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 73 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!