வெளியிடப்பட்ட நேரம்: 01:41 (04/09/2017)

கடைசி தொடர்பு:01:41 (04/09/2017)

இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்... என்ன சொல்கிறார் கேப்டன் கோலி?

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, இன்று கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. மேலும், இந்தப் போட்டியில் கோலி, தனது 30-வது சதத்தை அடித்தார். 

விராட் கோலி


இன்று ஐந்தாவது ஒருநாள் போட்டியும் முடிவடைந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 'டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை அனைத்து தொடர்களிலும் நாங்கள் மிகச் சிறப்பாகவே விளையாடி வந்தோம். ஆனால், ஒருநாள் போட்டியில் டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு சாதிக்கவில்லை. ஆனால், இலங்கைத் தொடரைப் பொறுத்த வரையில், டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியிலும் சாதித்துள்ளோம். நல்ல பழக்கங்களைப் பின்பற்றுவது கடினம். ஆனால், பின்பற்றிவிட்டால், விளையாட்டில் எளிதில் ஜொலித்துவிடலாம். என்ன நடந்தாலும் இந்த விளையாட்டுக்கு என்று இருக்கும் மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறோம்' என்று கூறினார்.