'கண்டிப்பாக நாங்கள் மீண்டெழுவோம்..!'- இலங்கை அணி நம்பிக்கை

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதனால், அந்நாட்டு ரசிகர்களும் அணியினரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

உபுல் தரங்கா

இந்நிலையில், இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா, 'ஒரு கேப்டனாக இந்தத் தொடரை இப்படி இழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால், இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மீண்டெழுந்து வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. இன்னும் ஒரேயொரு மாதத்தில் அடுத்த ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. அதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் தோல்வியடையும் போது எங்கள் ரசிகர்கள் எங்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். ஆனால், தவறுகள் நடக்கத்தான் செய்யும். எனவே எங்கள் ரசிகர்களின் ஆதரவு இப்போதுதான் தேவைப்படுகிறது. அதுவே எங்கள் பலம்!' என்று தெரிவித்துள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!