ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்

ந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடர் ஒவ்வோர் ஆண்டும் திருவிழா போன்று நடைபெற்று வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஐ.பி.எல் தொடர் ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

ipl media rights

இதுவரை நடந்த  10 ஐ.பி.எல் தொடர்களை சோனி நிறுவனம் ஒளிபரப்பு செய்து வந்தது. பத்து வருடத்திற்கான டெண்டர் முடிவடைந்ததால் அடுத்த ஐந்து ஆண்டிற்கான டெண்டர் இன்று நடைபெற்றது. இதில் ஸ்டார் இந்தியா, சோனி, ஜியோ, ஏர்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. 

இந்த டெண்டரின் முடிவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டிற்கான தொலைக்காட்சி உரிமைத்தைப் பெற்றது. இந்த உரிமத்தை ரூ 16,347.50 கோடி தொகைக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றது. தொலைக்காட்சி உரிமம் மட்டுமில்லாமல் டிஜிட்டல் ஒளிபரப்பு, இந்தியா அல்லாத மற்ற நாடுகள் ஒளிபரப்பு என ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்.  24 நிறுவனங்கள் இந்த டெண்டர் நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஒளிபரப்பு உரிமைத்தையும் ஸ்டார் இந்தியா நிறுவனமே கைப்பற்றியது. 

ஏற்கெனவே டைட்டில் ஸ்பான்சரை சுமார் 2200 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிப்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!