Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

'கோலியைவிட ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்!' - மைக்கேல் கிளார்க்கின் சர்ப்ரைஸ் பதில்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் போட்டிகள்கொண்ட தொடரிலும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட உள்ளனர். தொடர் வெற்றிகளைக் குவித்துவரும் இந்திய அணியை, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா சந்திக்க உள்ளதால், இந்தத் தொடர் தொடர்பான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

மைக்கெல் கிளார்க்

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஒரு பேட்டியில், இந்திய கேப்டன் கோலி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ஆகியோரில் யார் சிறந்தவர்கள் என்று விளக்கினார். அவர், 'கோலி, ஸ்மித்தை விட ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார். அதே நேரத்தில் தற்சமயம் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் கோலியைவிட சிறப்பாக ஸ்கோர் செய்துவருகிறார். அவர்கள் தலைமைப் பண்பைப் பொறுத்தவரையில், இருவருமே சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றனர். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடரை வென்று, ஆஸ்திரேலியா மறுபடியும் நம்பர்.1 இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement