’இந்திய அணியின் மோசமான காலகட்டம் எது தெரியுமா?’ - மனம் திறந்த சச்சின்

கடந்த 2006-2007-க்கு  இடைப்பட்ட காலமே, இந்திய அணிக்கு மோசமான காலகட்டமாக அமைந்துவிட்டதாக, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 


மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெண்டுல்கர், ‘என்னைப் பொறுத்தவரை கடந்த 2006-07 காலகட்டமே இந்தியக் கிரிக்கெட் அணியின் மோசமான காலகட்டம். 2007 உலகக் கோப்பைத் தொடரின் முதல் சுற்றில் தோற்று வெளியேறிய பின்னர், இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்தத் தோல்யிலிருந்து ஓர் அணியாக மீண்டுவர ஒற்றுமையுடன் உழைத்தோம். அந்த இடத்திலி  ருந்து புதிய சிந்தனையுடன், புதிய பாதையில் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். அந்த மாற்றங்கள் அனைத்தும் சரியானவையா, இல்லையா என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. மாற்றங்கள் அனைத்தும் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. நல்ல முடிவுகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. உலகக் கோப்பையைக் கையில் ஏந்த, நான் 21 ஆண்டுகள் பொறுமையுடன் இருக்க நேர்ந்தது’ என்றார்.

ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, கடந்த 2007 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றில், இலங்கை மற்றும் வங்கதேச அணிகளிடம் தோல்வியடைந்தது. இதனால், உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குக்கூட தகுதி பெறாமல், இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!