Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‛கோலியை சீண்டாதீர்கள்!’ - ஆஸி வீரர்களுக்கு கில்லெஸ்பீ எச்சரிக்கை

"இந்திய கேப்டன் விராட் கோலியை களத்தில் வார்த்தைகளால் சீண்டாதீர்கள்" என்று ஆஸ்திரேலிய வீரர்களுக்கு, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பீ எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறப்பான பவுலிங்கின் மூலம் மட்டும் கோலியை அமைதிப்படுத்த முயற்சிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆஸியின் பவுலிங்கை விட இந்திய வேகப்பந்து வீச்சே பலமாக இருப்பதாகக் கூறிய அவர் இந்த ஆஸ்திரேலிய அணிக்கு 'விராட் அண்ட் கோ'வின் வெற்றிநடையை முறியடிக்கும் திறன் உள்ளதாகவும் கூறினார்.

ஐ.பி.எல் போட்டிகளில் பல ஆண்டுகளாக இங்கு ஆடிய அனுபவம் இருந்தாலும் ஆஸி அணியால் இந்தியாவில் ஒருநாள் தொடர்களை வெல்ல முடியவில்லையே... இந்நிலை மாறுமா?

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய சூழ்நிலைகளால் எந்தப் பின்னடைவும் ஏற்படாது. இந்தியா ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த அணி. சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது எந்த அணிக்குமே கடினம். இது மிகவும் பரபரப்பான தொடராக இருக்கும். ஆஸ்திரேலியா 3-2 என தொடரை வெல்லும் என்று நினைக்கிறேன்.

                                                    கோலி

ஆஸ்திரேலியாவால் கோலியைக் கட்டுப்படுத்த முடியுமா? இந்தியக் கேப்டனை கட்டுப்படுத்த எது சிறந்த யுக்தியாக இருக்கும்?

கோலி ஒரு மிகச்சிறந்த வீரர். ஃபீல்டர்கள் பரவி நிற்கும்போது அநாயசமாக ரன் எடுக்கத் தொடங்கிவிடுவார். கோலியைக் கட்டுப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் எந்த வகையிலான 'வாய்ச் சண்டை'யிலும் ஈடுபடக்கூடாது. அதற்குப் பதிலாக அவருக்கு பவுன்சர் பந்துகளை வீசி, 'பேக் ஃபுட்டில்' ஆட வைக்க வேண்டும். அடுத்த பந்துதான் மிக முக்கியமானது. ஆன் சைடில் இரண்டு ஃபீல்டர்களை வைத்துக்கொண்டு ஸ்டம்ப் லைனில் பந்து வீசலாம். அவரை அவரது 'கம்ஃபோர்ட் ஜோனில்' இருந்து வெளியில் கொண்டுவருவது மிகவும் முக்கியம்.

ஸ்டார்க்கின் இழப்பை ஆஸ்திரேலிய பவுலிங் யூனிட் சமாளிக்குமா?

ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த பவுலர். இந்தத் தொடரில் அவர் விளையாடாதது சற்று பின்னடைவே. கம்மின்ஸ் கூல்டர்நைல் போன்ற பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். கம்மின்சால் அனைத்துப் போட்டிகளிலும் விளையாட முடியாது. அவரால் 2 அல்லது மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும். கூல்டர்நைல் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளது. அவர் மிகவும் வேகமாகவும், சரியான இடத்திலும் பந்து வீசக்கூடியவர்.

பவுலிங்கில் எந்த அணி சிறப்பாக உள்ளது?

இந்திய பவுலிங்கின் கையே ஓங்கி உள்ளதாக  நினைக்கிறேன். பும்ரா, ஷமி, புவனேஷ் ஆகியோர் மிகச்சிறப்பாகப் பந்துவீசுகின்றனர். இந்திய மைதாங்களில் எப்படிப் பந்துவீச வேண்டுமென்பதை நன்கு அறிந்து சிறப்பாகச் செயல்படுகின்றனர். இங்கு பந்துவீசுவதை அவர்கள் மிகவும் விரும்புகின்றனர். ஆஸ்திரேலிய பவுலர்களும் நல்ல மனநிலையோடு தொடரை எதிகொள்ள வேண்டும். வீரர்களின் மனநிலை மிகவும் முக்கியம்.

அஷ்வின், ஜடேஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஓய்வு உங்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளதா?

இந்திய அணியின் தேர்வாளர்கள் வீரர்களிள் வேலைப் பளுவைக் குறைக்க நினைக்கிறார்கள். ஒரு சில இந்திய வீரர்கள் எக்கச்சக்கமாக விளையாடியுள்ளனர். அவர்களுக்கு ஓய்வு அவசியமே. அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இந்தத் தொடரில் ஆடம் ஜம்பா எங்களுக்குத் துருப்புச்சீட்டாக இருப்பார் என்று ஸ்மித் கூறியிருக்கிறாரே..?

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் அவரின் செயல்பாடு அருமை. அவர் நிச்சயம் ஆடும் லெவனில் எப்போதும் இடம்பெற வேண்டும்’’ என்றார் கில்லெஸ்பி. 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close