ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

'தோனி இல்லாத அணியை யோசிக்கவே முடியாது' - ரவி சாஸ்திரி ஓப்பன் டாக்!

இலங்கைத் தொடருக்கு முன், தோனி குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர், அணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும்,  அப்படி, இப்படி என்று விமர்சனங்கள் வரிசைகட்டி நின்றன. ஆனால், அதற்கெல்லாம் தனது ஸ்டைலிலேயே பதிலளித்தார் தோனி. ஒரு நாள் தொடரில் இலங்கையை, இந்தியா வொய்ட் வாஷ் செய்யத் தூணாக நின்றார் தோனி. 

தோனி - ரவி சாஸ்திரி


அந்தத் தொடரில் 162 ரன்கள் எடுத்த தோனி, 82.23 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பழைய பன்னீர்செல்வமாகத் திரும்பினார். அதேபோல, ஸ்டம்ப்பிங்கிலும் சாதனை செய்தார். இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் தொடங்க உள்ள நிலையில், தோனி குறித்து, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மனம் திறந்துள்ளார்.  


"தோனியைப் போன்ற ஒரு சிறந்த வீரரை வேறு எங்கு தேடுவீர்கள். கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் ஆகியோர் போலத்தான் தோனியும். அவருடைய சாதனைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஒரு வீரர் தற்போதுள்ள ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் ஆகியவற்றை வைத்துதான் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். தோனிக்கு அந்த இரண்டுமே உள்ளது. அவரது விக்கெட் கீப்பிங்தான், தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறந்த ஒன்று. குறிப்பாக, இலங்கையில் அவர் சிறப்பாக பேட் செய்தார்.


ஆனால், அது வெறும் ட்ரெய்லர்தான். மெய்ன் படத்தை இனிதான் பார்க்கப்போகிறோம். அவர் இப்படியே விளையாடிக்கொண்டிருந்தால், 2019 உலகக் கோப்பையில் அவர் இடம்பெறுவார். ஏன், தோனி இல்லாத அணியையே யோசித்துப்பார்க்க முடியாது" என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!