Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியிலிருந்து விலகிய தவான்... மாற்று வீரரை அறிவிக்காத பி.சி.சி.ஐ.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் முதல் மூன்று போட்டியிலிருந்து இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் தவான் விலகி  யுள்ளார். 

dhawan

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி, வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் உள்ளனர். 

இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்குவதாக இருந்தது.

இந்நிலையில், தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்துக்காக, முதல் மூன்று போட்டிகளிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்திருந்தார் தவான். நேற்று, தவானின் கோரிக்கையை ஏற்ற பி.சி.சி.ஐ, அவருக்கு முதல் மூன்று போட்டிகளுக்கான அணியிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், அவருக்குப் பதிலாக புதிய வீரரை பி.சி.சி.ஐ அறிவிக்கவில்லை. அணியில் கே.எல் ராகுல், ரஹானே ஆகியோருக்கு தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய அனுபவம் உள்ளதால், அவர்களில் ஒருவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்க வாய்ப்புள்ளது. 

கடந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் முதல், தவான் உச்சகட்ட ஃபார்மில் இருந்துவருகிறார். கடந்த இலங்கைத் தொடரில் சிறப்பான தொடக்கத்தை அவர் அளித்துவந்தநிலையில், தற்போது அணியில் தவான் இல்லாதது இந்திய அணிக்குச் சற்று பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close