Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இனி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவே மாட்டேன்' - சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளேவுக்கும், கேப்டன் கோலிக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ இறங்கியது. இதற்காக, இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக், ரவிசாஸ்திரி, டாம் மூடி உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர். முதலில் சேவாக்தான் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியானது. இதனிடையே, ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

சேவாக்


இந்நிலையில், பயிற்சியாளர் விவகாரம்குறித்து சேவாக் முதல்முறையாக மனம் திறந்துள்ளார். ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "பி.சி.சி.ஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால்தான், நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை. முதலில் எனக்குப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் எண்ணமே இல்லை.


பி.சி.சி.ஐ-யின் பொறுப்புச் செயலாளராக உள்ள அமிதாப் சௌதாரி, கிரிக்கெட் மேம்பாடு பொது மேலாளர் ஶ்ரீதர் ஆகியோர்தான் என்னிடம் நேரில் வந்து பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதுகுறித்து சிந்திக்குமாறு கூறினர். இதையடுத்து, நான் கேப்டன் கோலியிடமும் பேசினேன். அவரும் விண்ணப்பிக்குமாறு கூறினார். அப்போது நான், சாம்பியன்ஸ் ட்ராபிக்காக இங்கிலாந்தில் இருந்தேன். 'பயிற்சியாளர் பதவிக்கு நீங்கள் ஏன் விண்ணப்பிக்கவில்லை' என்று ரவி சாஸ்திரியிடம் கேட்டேன். அதற்கு அவர், 'நான் ஏற்கெனவே ஒருமுறை செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்' என்றார். ஆனால், பிறகு அவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்.

பல்வேறு யோசனைகளுக்குப் பிறகுதான் நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், இனி ஒருபோதும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement