ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை: மழையால் பாதிக்குமா?

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ளன. முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை, இலங்கையை வொய்ட் வாஷ் செய்த உற்சாகத்தில் களமிறங்க உள்ளது. எனவே, இந்தத் தொடரை இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், மறுமுனையில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய அணி கூறிவருகிறது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் தவான் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ரஹானே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க உள்ளார்.

கோலி

 

அதேபோல, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்ஸர் படேல் காயம் காரணமாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சாஹல், குல்தீப் யாதவ் அணியில் இருப்பதால் ஜடேஜா ஆடுவது சந்தேகமாக உள்ளது. சுழற்பந்து துறைதான் அணிக்கு பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கை கட்டுப்படுத்தி வெற்றி பெறுவோம் என்று ஆஸ்திரேலியா கூறி வருகிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன.

சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஆறு வெற்றியும், நான்கு தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவுகிடைக்கவில்லை. இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து, இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  எனவே, இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!