பயிற்சியாளர் நியமன விவகாரம்: சேவாக்கை விமர்சித்த கங்குலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர் சேவாக், பயிற்சியாளர் நியமனம் குறித்து கூறிய கருத்தை விமர்சனம் செய்துள்ளார் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

கங்குலி மற்றும் சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, கும்ப்ளே, தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர விருப்புமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, சேவாக், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் அதற்கு விண்ணப்பத்தனர். முடிவில், ரவி சாஸ்திரிதான் இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் விரக்தியடைந்த சேவாக், 'பி.சி.சி.ஐ அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆதரவு இல்லாததால்தான், நான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பணிக்கு இனிமேல் விண்ணப்பிக்க மாட்டேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார். 

இதற்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 'சேவாக் கூறியதைப் பற்றி சொல்லுவதற்கு எதுவுமில்லை. ஆனால், அவர் முட்டாளதனமாக பேசியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பிலிந்து மூவரில் கங்குலியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!