Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக சுழல் மன்னனுக்கு ஹேப்பி பர்த்டே!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வரும் அஸ்வின் சென்னையில் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி பிறந்தார்.

ஆஷ்வின்
 

ஆரம்ப காலத்தில் ஓபனிங் பேட்ஸ்மெனாக இருந்த அஷ்வின், தற்போது முழுநேர சுழற்பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகவும் திகழ்கிறார். அவரது கிரிக்கெட் பயணத்தின் சில குறிப்புகள்:

*வேகமாக 50,100,150,200 மற்றும் 250 விக்கெட்களை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

*2016-ம் ஆண்டு ஐசிசி-யின் 'ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்' என்ற விருதைப் பெற்றார். இதன்மூலம் சச்சின், டிராவிட்டுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே ஆண்டில் ஐசிசி 'சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்' என்ற விருதையும் பெற்றார்.

*ஒரே போட்டியில் பேட்டிங்கில் 100 ரன்கள் அடித்து பந்து வீச்சில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இவர் டெஸ்ட் போட்டியில் 4 முறை சதம் அடித்துள்ளார். அதில் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று ஒரு போட்டி டிராவிலும் முடிந்தது.

*தனது முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

*2016-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் அந்த ஆண்டில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

* 2014-ம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு  'அர்ஜுனா விருது' வழங்கி கௌரவித்தது.

*2012-13-ம் ஆண்டுக்கான 'பிசிசிஐ' யின் 'பால்லி உம்ரிகார்' (Polly Umrigar) விருதைப் பெற்றார்.

*தமிழக வீரர் அஷ்வின் இந்த ஆண்டு முதல் இங்கிலாந்தின் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் வேர்சஸ்டர்ஷிர் அணிக்காக ஆடி வருகிறார்.

*பேட்ஸ்மேன்களைக் கலங்கவைக்கும் தனது ஸ்பெஷல் பந்து வீச்சான 'கேரம் பால்' இவரது சிறப்பாகும்.

தனது வருகைக்குப் பிறகு, அணியின் வெற்றிக்குப் பெரும் பலமாக திகழும் அஷ்வின் வரும் ஆண்டுகளில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement