Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஆஸ்திரேலியாவுக்கு 282 ரன்கள் இலக்கு..! இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஹர்திக் பாண்டியா, தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 281 ரன்களை எடுத்துள்ளது. 


இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டிவெண்டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். 5 ரன்களில் ரஹானே ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் விராத் கோலி 0 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவும் 0 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்தடுத்து ரோஹித் சர்மாவும், கேதர் ஜாதவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களையடுத்து தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். அவர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய பாண்டியா 83 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவர் வரை விளையாடிய தோனி 79 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 281 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக நாதன் கோல்டர் நைல் 3 விக்கெட்டுகளையும் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement