Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை மைதானத்தில் புதிய சாதனை படைத்த தோனி..! #IndvAus

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய அரை சதத்தின் மூலம் சர்வதேசப் போட்டிகளில் 100 அரை சதங்களைக் கடந்து தோனி சாதனை படைத்துள்ளார். 


இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 281 ரன்களைக் குவித்தது. தொடக்கத்தில் 11 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. பின்னர் ஹர்திக் பாண்டியாவும் தோனியும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரசிகர்களின் அமோக வரவேற்புகளுக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய தோனி அரை சதத்தைக் கடந்தார்.

88 பந்துகளில் 79 ரன்களைக் குவித்தார். இந்த அரை சதத்தின் மூலம் சர்வதேசப் போட்டிகளில் தனது நூறாவது அரை சதத்தைக் கடந்தார் தோனி. இதுவரை ஒருநாள் போட்டிகளில் 66 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 33 முறையும் டி20-யில் ஒருமுறையும் அரை சதம் அடித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close