ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

சென்னை ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 281 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கி இருந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

அதன்பின்னர் கேதர் ஜாதவ், ஹர்திக் பண்டியா மற்றும் தோனி ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. மழையின் குறுக்கீடு இருந்ததால் ஆட்டம் 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 21 ஓவர்களில் 164 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. 

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து. இறுதியில் அந்த அணி 21 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வுசெய்யப்பட்டார். 

இந்திய அணி தரப்பில் சஹால் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இரண்டாவது போட்டி வரும் 21 -ம் தேதி கொல்கத்தா மைதானத்தில் நடைபெறுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!