''எங்களுக்கு கேப்டன் 'தல தோனி'தான்...'' சென்னை ரசிகர்களின் வெற்றிக் கொண்டாட்டப் புகைப்படங்கள் #IndvAus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று சென்னையில் தொடங்கிய தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையாதபோதும் தோனி, ஹர்திக் பாண்டியா, மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் பங்களிப்புடன் 281 ரன்கள் எடுத்தது. 

மழையால் தாமதமான போட்டி, 21 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. வெற்றியின் இலக்கும் 164 ஆனது. இந்தியப் பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான செயல்பாடு காரணமாக, ஆஸ்திரேலிய அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை கிரிக்கெட் ரசிகர்களின் ‘தல’ தோனி,  தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 100 -வது அரைசதத்தை எட்டினார். சென்னையில், இந்திய அணி நீண்ட காலத்துக்குப் பிறகு, சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதனால், தோனியை மைதானத்தில் கண்டதும் ரசிகர்கள் எழுந்துநின்று வரவேற்றனர். இத்தகைய வரவேற்பு, தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் கிடைக்குமா என்றுகூட தெரியாது.

மைதானத்துக்கு வெளியே வந்த ரசிகர்களும் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடியபடியே வந்தனர். போட்டி முடிந்து வெளியே வந்தவர்கள், தோனி... தோனி... என கோஷமிட்டு வந்தனர். எங்களுக்கு எப்போதும் தல தோனிதான் கேப்டன் என ரசிகர்கள் உணர்ச்சிகரமாகத் தெரிவித்தனர்.  

படங்கள்: வீ. நாகமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!