ஜப்பான் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடர்; சிந்து, சாய்னா பங்கேற்பு

ஜப்பான் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்ட்டன் தொடர், ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று தொடங்குகிறது. 

பேட்மின்ட்டன் உலகில் முக்கிய தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் ஜப்பான் ஓப்பன் தொடரில், உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். கொரியன் ஓப்பன் தொடரை வென்ற கையுடன் அடுத்த முக்கிய தொடருக்குத் தயராகிவிட்டார் பி.வி சிந்து

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு தொடர்களின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நம்பிக்கையுடன், ஜப்பான் ஓப்பன் தொடரில் களமிறங்குகிறார் சிந்து. நாளை நடைபெறும் முதலாவது போட்டியில், அவர் ஜப்பான் வீராங்கனை மினாட்சூவை எதிர்கொள்கிறார். உலகின் முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொள்வதால், முதல் சுற்றிலிருந்தே தொடர் அனல் பறக்கும். 

மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், தனது முதல் சுற்றில் தாய்லாந்து வீராங்கனையை எதிர்கொள்கிறார். கடந்த தொடர்களில் சாய்னா பெரிய அளவில் சாதிக்க முடியாமல்போயிருந்தாலும் இந்த முறை தனது பழைய பயிற்சியாளர் கோபிசந்த் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுவருகிறார். இதனால், அவர்மீதும் அதிக கவனம் உள்ளது. 

ஆண்கள் பிரிவில் இந்தியாவின் வெர்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த், ப்ரணாய் ஆகியோர் ஜப்பான் தொடரில் களம் காணுகிறார்கள். இன்று கலப்பு இரட்டையர்கள் ஆட்டம் நடைபெறுகிறது. நாளை முதல் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெறும். ஜப்பான் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை 3,25,000 அமெரிக்க டாலர் ஆகும்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!