ஸ்மித்தை கலாய்த்த கோலி வைரல் வீடியோ!

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை, இந்திய கேப்டன் கோலி கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.

கோலி


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, ஆரம்பத்தில் தடுமாறியது. பின்னர், தனது இரண்டாவது மண்ணான சேப்பாக்கத்தில், பாண்ட்யாவுடன் கைகோத்து, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அடக்கினார் தோனி. பாண்ட்யா ஒருபக்கம் அடித்து நொறுக்க, மறுபக்கம் தனது க்ளாஸான ஆட்டம்மூலம், இந்திய அணி டீசன்ட்டான ஸ்கோரை எடுக்க உதவினார் தோனி. 

இதையடுத்து, மழை பெய்துவந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஓவர்களும் இலக்கும் மாற்றப்பட்டுவந்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனிடையே, இந்திய அணி பேட் செய்யும்போது, 45-வது ஓவரை மார்கஸ் ஸ்ட்னினிஸ் வீசினார். புவனேஷ்வர் குமார் பேட் செய்து கொண்டிருந்தார். அப்போது, எல்.பி.டபிள்யூ-வுக்காக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் செய்தார். ஆனால், பந்து பேட்டில் பட்டது, அதில் தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து, அம்பயர் தனது முடிவைத் தொடர்வதாக அறிவித்தார்.

இந்த விஷயங்களையெல்லாம் பெளண்ட்ரி லைனில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த கேப்டன் கோலி, நாட் அவுட் என்று அம்பயர் சொன்னவுடன், ஆஸ்திரேலியாவை கலாய்ப்பதற்காக லேசாக உடலை அசைத்து டான்ஸ் ஆடி, அவுட் என்பதுபோல சைகை காட்டினார். இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!