வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (19/09/2017)

கடைசி தொடர்பு:17:57 (19/09/2017)

கோலிக்குப் பாகிஸ்தான் போலீஸ் விட்ட தூது!

ரன் மெஷின், சேஸிங் கில்லி, கெத்து கேப்டன் என்று கிரிக்கெட் உலகின் ராக்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் கோலி. இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே கோலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளே கோலிக்குத் தீவிர ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக, கோலி இந்திய கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு அவரது புகழ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.

பாகிஸ்தான் போலீஸ்காரர்


இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான டேனியல் வட், கோலிக்கு லவ் ப்ரப்போஸ் செய்திருந்தார். இந்நிலையில், கோலிக்கு இம்முறை பாகிஸ்தானிலிருந்து ப்ரப்போஸல் வந்துள்ளது. பாகிஸ்தானில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வாரம் பாகிஸ்தான் அணிக்கும் உலக லெவன் அணிக்கும் இடையே டி20 தொடர் நடைபெற்றது. இதனிடையே, கடந்த 15-ம் தேதி லாகூரில் நடைபெற்ற போட்டியின்போது அங்கு ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களின் பெயர்கள் குறித்த பதாகைகளை வைத்திருந்தனர். குறிப்பாக, வீ மிஸ் தோனி, கோலி... பாகிஸ்தானில் விளையாடுங்கள் என்று கூறியிருந்தனர். ஆனால், இதையெல்லாம் தாண்டி கவனத்தை ஈர்த்தவர் ஒரு போலீஸ். அவர் தன் கையில் இருந்த பேனரில், கோலி என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் (Kohli Marry Me) என்று கூறியிருந்தார்.