துப்பாக்கிச் சூட்டிலும் அசத்தும் தோனி! - வைரல் வீடியோ

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

Photo Credit: Kolkatta Police

கொல்கத்தாவில் மழை பெய்துவருவதால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய வீரர்களின் பயிற்சி ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தா காவல்துறையின் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்துக்குச் சென்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார். அவர், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படத்தை கொல்கத்தா போலீஸார், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதில், குறிபார்த்துச் சுடும் தோனியின் திறன் வியக்கத்தக்க அளவில் இருப்பதாக கொல்கத்தா போலீஸார் பாராட்டியுள்ளனர். முதலில் புகைப்படத்தை மட்டுமே வெளியிட்ட அவர்கள், ரசிகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று, தோனி பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்றையும் பதிவிட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கடந்த ஜனவரியில் விலகிய தோனி, அதன்பின்னர் விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் 627 ரன்கள் குவித்துள்ளார். இந்தியக் கிரிக்கெட்டுக்கு தோனி அளித்துள்ள பங்களிப்பைப் பாராட்டும் வகையில், அவருக்கு பத்மபூஷண் விருது வழங்க மத்திய அரசுக்கு இந்தியக் கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.  


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!