Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆஸியை வீழ்த்தியது இந்தியா! #IndvAus #LiveUpdate

 

*இதன்மூலம் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்திக் வென்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

*கடைசி விக்கெட்டாக ரிச்சர்ட்சனை LBW முறையில் புவி வெளியேற்றினார். ஆஸி அணி 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது

*ஆஸி அணிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஸ்டாய்னிஸ் 58 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

*ஆஸ்திரேலிய அணியின் கோல்டர்நைல், பாண்டியாவின் ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆஸி அணி 9 விக்கெட்டு 182 ரன்கள் எடுத்துள்ளது

 

*இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் ஹாட்-ட்ரிக் பாலை எதிர்கொள்ள வந்த கம்மின்ஸ் தோனியிடம் பிடிகொடுத்து குல்தீப்பின் ஹாட்-ட்ரிக்காக பலியானார்.

*ஆஸி கீப்பர் மேத்யூவேட், 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். குல்தீப் யாதவின பந்தை அடிக்க முற்பட, பந்து இன்சைடு-எட்ஜாகி போல்டானார். அதற்கடுத்த பந்திலேயே அகர் கோல்டன் டக் ஆனார். சைனா-மேன் பந்தைக் கணிக்க முடியாமல் LBW ஆனார். ஆஸி அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

*சப்ஸ்டிட்யூட் பிளேயராக வந்த ரவீந்திர ஜடேஜா, அசத்தலாக் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார். சிறப்பாக விளையாடி வந்த ஆஸி கேப்டன் ஸ்மித் பாண்டியாவின் பந்தை தூக்கியடிக்க, டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த ஜட்டூ அதை டைவ் அடித்துப் பிடித்தார். ஸ்மித் 76 பந்துகள் 59 ரன்கள் எடுத்தார்.

*தனது 100-வது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அசத்தினார் ஆஸி கேப்டன் ஸ்மித். 65 பந்துகளில் அவர் தனது அரைசதத்தைக் கடந்தார். ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

*தோனியின் அசத்தல் ஸ்டம்பிங்கில் மேக்ஸ்வெல் வெளியேறினார். குல்தீப் ஓவரில் 2 சிக்சர்கள் அடித்த அவர் சஹாலின் ஓவரில் வீழ்ந்தார். தோனியின் அந்த அசத்தல் ஸ்டம்பிங் அனைவரையும் மெர்சல் ஆக்கியது.

*ஆஸி அணி 19.4 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. 3 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் கேப்டன் ஸ்மித் 39 ரன்களுடன் ஆடி வருகிறார்.

 

*சிறப்பாக் ஆடிவந்த டிராவிஸ் ஹெட், 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஹால் பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் - ஹெட் இணை 76 ரன்கள் சேர்த்தது.அடுத்ததாக மேக்ஸ்வெல் களம் புகுந்தார்.

*கோட்டை விட்ட ரோஹித்: புவனேஷ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்சை முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித் பிடிக்கத் தவறினார். ஆஸி அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.

*புவியின் ஸ்விங்கில் வார்னரும் இரண்டாவது ஸ்லிப்பில் நின்றிருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அதிரடி மன்னனான வார்னர் கூட 9 பந்துகளில் 1 ரன் தான் எடுக்க முடிந்தது.

*இந்திய பௌலர்களின் பந்துவீச்சில் ஆஸி வீரர்கள் வார்னரும், ஸ்மித்தும் கூடப் பயங்கரமாகத் தினறினார். புவியின் ஸ்விங்குகள் வேறு லெவல்! 

*253 ரன்கள் என்ற இலக்கோடு ஆஸ்திரேலிய அணி தனது இன்னிங்சைத் தொடங்கியது. புவியும், பூம்ராவும் மிகவும் சிறப்பாக் அபந்து வீசினர். பந்து நன்றாக ஸ்விங் ஆனது. புவனேஷின் ஸ்விங் பாலில், கார்ட்ரைட் போல்டானார். அவர் 15 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். ஆஸி அணி 1 விக்கெட் இழப்புக்கு 2 ரன்கள் எடுத்துள்ளது.

 

*இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸி பவுலர்களில் கோல்டர்நைல், ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

*புவிக்குப் பிறகு களமிறங்கிய குல்தீப் யாதவ், ரன் எடுக்காமல் விக்கெட் கீப்பர் வேடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை பேட் கம்மின்ஸ் கைப்பற்றினார்.

*ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 20 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது.

*மழை குறுக்கீட்டுப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

*முதல் போட்டியைப் போலவே இரண்டாவது போட்டியிலும் மழை குறுக்கிட்டுள்ளது. இவ்வளவு நேரம் வெயில் வாட்டிய நிலையில் திடீரென மழை வந்து போட்டியை நிறுத்திவிட்டது.

*கோலடர்நைல் ஓவரில், புவனேஷ்வர் குமார் அடித்த பந்து பாண்டியாவைத் தாக்கியது. ஹெல்மட்டில் பந்து பட்டதும், அவர் நிலைகுலைய உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விழுந்தது, ஆஸி வீரர்களும் அவருக்கு என்ன ஆயிற்று என்று ஓடிவந்து பார்த்தனர். அதன் பின்னர் அவர் தொடர்ந்து விளையாடுகிறார், 

*பெரிதும் நம்பியிருந்த தோனி 10 பந்துகளில் 5 ரன் எடுத்து வெளியேறினார். ரிச்சர்ட்ஸன் ஓவரில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

*கோலி வெளியேறியதைத் தொடர்ந்து கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் பாண்டியா களம் கண்டார். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார்.

*தனது 31-வது சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த கேப்டன் கோலி 92 ரன்களில் போல்டானார். 107 பந்துகளைச் சந்தித்த அவர் 8 பவுண்டரிகளை அடித்தார். கோலி சதத்தை மிஸ் செய்ததில் ஈடன் கார்டன் மைதானம் அதிர்ந்து போனது.

*சென்னை போட்டியில் 67-வது பந்தில் தனது முதல் பவுண்டரியை அடித்த தோனி, இன்று இரண்டாவது பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார்.

*கேதார் ஜாதவ் அதிரடியில் இறங்கியுள்ளார். அகர் ஓவரில் அடுத்தடுத்த 2 பவுண்டரிகள் விளாசியவர், ஸ்டோய்னிஸ் ஓவரில், தான் சந்தித்த அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்.

*கேதார் ஜாதவ் 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து கோல்டர்நைல் பந்தில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். அதைத்தொடர்ந்து தோனி களமிறங்கியுள்ளார்.

*அகர் ஓவரில் கோலி அடித்த பவுண்டரியை அம்பயர் நிராகரித்து விட்டார். அகரின் கிளாத் கீழே விழுந்ததனால் அகர் பாலை ரிலீஸ் செய்யும் முன்பே அம்பயர் பந்தை 'டெட்' ஆக அறிவித்துவிட்டார். அதை கவனிக்காத கோலி அதை பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அந்த 4 ரன்கள் வீனானது.

*இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி பற்றி சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெறியான ட்வீட்களை அப்லோட் செய்துகொண்டிருக்கிறது. "ரஹானேவை இன்று ரன்-அவுட் மட்டுமே செய்ய முடியும் என்று தெரிந்து ஆஸி அணி அதைச் செய்துள்ளது" என்று ட்வீட் செய்திருக்கும் சி.எஸ்.கே, ரஹானேவின் பேட்டுக்கும், கிரீசுக்குமான நெருக்கம் கார்ட்டூன் கேரக்டர்களான டிமோன்-பும்பாவின் நெருக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகவும் ட்வீட்டியுள்ளது.

*மனீஷ் பாண்டே 3 ரன்களில் அகரின் பந்துவீச்சில் போல்டானார். முதல் போட்டியில் அவர் டக் அவுட் ஆகியிருந்தார்.

*ரஹானே 55 ரன்களில் ரன்-அவுட் ஆனார். தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.

*விராட்-ரஹானே பார்ட்னர்ஷிப் 100 ரன்கள் அடித்துள்ளது. 110 பந்துகளில் இந்த இணை சதம் அடித்துள்ளது.

*கோலியைத் தொடர்ந்து ஓபனிங் பேட்ஸ்மேன் ரஹானேவும் அரைசதம் கடந்தார். 62 பந்துகளைச் சந்தித்த அவர் 6 பவுண்டரிகள் அடித்துள்ளார். இது அவருக்கு 20-வது அரைசதம்

*இந்திய கேப்டன் கோலி 60 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இது அவருக்கு 45-வது அரைசதமாகும்.

*இந்திய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. சென்னையில் 24-வது ஓவரில் 100 ரன்னைத் தொட்ட இந்திய அணி, இப்போட்டியில் 20-வது ஓவரிலேயே 100 ரன்களைத் தொட்டது.

IndVAus

* சென்னை போட்டியில் சொதப்பிய இந்திய கேப்டன் கோலி, இன்றைய ஆட்டத்தில் நல்ல டச்சில் இருக்கிறார். 44 பந்துகளில், 3 பவுண்டரியுடன் 31 ரன் எடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியின் Live Update, Commentary மற்றும் Chat Box. வாருங்கள் நண்பர்களே‌... Live  ஆக கதைக்கலாம்..! க்ளிக் செய்க...

*சென்னை ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டரை ஆட்டம் காண வைத்த நாதன் கோல்டர் நைல், இந்த போட்டியின் 6ஆவது ஓவரில் ரோகித் ஷர்மாவை வெளியேற்றினார். ரோகித் ஷர்மா 14 பந்துகளில் 7 ரன்களுடன் வெளியேறினார்.

* ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியை, இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் மற்றும் மகளிர் அணியின் ஆல்ரவுண்டர் ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் மணி அடித்துத் தொடங்கிவைத்தனர். 

* சமீபத்தில் உயிரிழந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பாப் ஹாலண்ட்டுக்கு மரியாதைசெலுத்தும் வகையில், ஆஸ்திரேலிய வீரர்கள், கையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர். 

 

Photo Credit: Cricket.com.au


* போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். 

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பங்கேற்கும் 100-வது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவாகும். 

இந்தியா vs ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டியின் Live Update, Commentary மற்றும் Chat Box. வாருங்கள் நண்பர்களே‌... Live  ஆக கதைக்கலாம்..! க்ளிக் செய்க...

* சென்னை ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணியில் ஒரே ஒரு மாற்றமாக, சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பாவுக்குப் பதிலாக ஆஸ்டின் அகர் சேர்க்கப்பட்டுள்ளார்.  


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement