வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (22/09/2017)

கடைசி தொடர்பு:09:03 (22/09/2017)

சாய்னா, பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி; ப்ரணாய், ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஜப்பான் ஓப்பன் பேட்மின்ட்டன் போட்டிகள், டோக்கியோ நகரில் நடைபெற்றுவருகிறது. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.

உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்குபெறும் ஜப்பான் ஓப்பன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள், நேற்று நடந்தது. இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து மற்றும் சாய்னா ஆகிய இருவருக்கும் இந்தச் சுற்று கடினமானதாக அமைந்தது. பி.வி.சிந்து, இந்தச் சுற்றில் ஜப்பானின் ஒக்குஹராவை எதிர்கொண்டார். முதல் செட்டை கடுமையாகப் போராடியும் 18-21 என இழந்த சிந்து, அடுத்த செட்டை 8-21 என இழந்து, தொடரிலிருந்து வெளியேறினார். 

மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில், சாய்னா 16-21, 13-21 எனத் தோல்வி அடந்தார். இதன்மூலம் இந்திய வீராங்கனைகள் ஒற்றையர் பிரிவிலிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேறி விட்டனர். 

ஆண்கள் ஒற்றையரில், இந்தியாவின் ப்ரணாய் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த், எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினர். மற்றொரு வீரர் வெர்மா தோல்வி அடந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ப்ரணவ் சோப்ரா- சிக்கி ரெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறியது.
இன்று, காலிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.