நெல்லையில் மாநில ட்ரம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி!

நெல்லையில் நடந்த மாநில அளவிலான ட்ரம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 200 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

ட்ரம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ்

தமிழ்நாடு மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேசன் சார்பாக நெல்லையில் மாநில ட்ரம்போலின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகள் இன்று நடைபெற்றது. 17 மாவட்டங்களைச் சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் இந்தப்போட்டியில் பங்கேற்றனர். ஆடவர், மகளிர் பிரிவினருக்கு தனித்தனியே 7 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 6 வயதுக்கு உட்பட்டோர், 8, 10,12 19, ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

மாநில அளவில் அனைத்து வயதுப் பிரிவினருக்கும் ட்ரம்போலின் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்பதால் நெல்லை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேசன் சார்பாக சிறப்பான வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டிகள் நடைபெற்ற அண்ணா விளையாட்டு அரங்கத்தில் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் தகுதி வாய்ந்த நடுவர்களைக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வயதுப் பிரிவினரும் ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற உள்ள தேசிய ட்ரம்போலின் போட்டியில் தமிழகத்தின் சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என மாநில ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேசன் தலைவரான பிரபு தெரிவித்தார். இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!