ஜப்பான் ஓப்பன் காலிறுதியில் ஸ்ரீகாந்த், ப்ரணாய் தோல்வி

ஜப்பான் ஓப்பன் பேட்மின்ட்டன் தொடர், டோக்கியோ நகரில் நடந்துவருகிறது. இந்தியப் பெண் நட்சத்திரங்கள் பி.வி சிந்து, சாய்னா நேவால் ஆகிய இருவரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறினர். 

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணாய், காலிறுதிக்கு முன்னேறி இருந்தனர். நேற்று காலிறுது ஆட்டங்கள் நடந்தது. ப்ரணாய் சீன வீரரிடம் 15-21, 14-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த், டென்மார்க் வீரரிடம் 17-21, 17-21 என தோல்வி அடைந்தார். இதனால், ஜப்பான் ஓப்பன் தொடரில் ஒற்றையர் பிரிவில் இந்தியர்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். 

கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் ப்ரனவ் சோப்ரா- சிக்கி ரெட்டி இணை காலியிறுதியில் போராடி வென்றது. முதல் செட்டை 21- 18 என கைப்பற்ற, அடுத்த செட்டை 9-21 என இழந்தார். வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில், இந்திய இணை கடுமையாகப் போராடி, 21- 19 என வெற்றிபெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று, அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!