வெளியிடப்பட்ட நேரம்: 20:07 (23/09/2017)

கடைசி தொடர்பு:20:07 (23/09/2017)

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?!

சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட்,  விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு.

தோனி

நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடித்துவிட மாட்டாரா என Msdians ஏங்குகிறார்கள். அதற்காகவே மைதானத்துக்கு படையெடுக்கிறார்கள். அடித்துவிட்டால் ஜென்ம சாபல்யம் அடைந்ததுபோல ஆர்ப்பரிக்கிறார்கள். 

வேகப்பந்தோ, ஸ்பின்னோ... மலிங்காவோ, ஃபாக்னரோ... இலங்கையோ, மும்பை இந்தியன்ஸோ... சேப்பாக்கமோ, வான்கடேவோ... இருந்த இடத்தில் இருந்தே ராக்கெட் பறக்கவிட தோனியால் மட்டுமே முடியும். அன்பிலீவபிள், அமேசிங், வாட்டே ஷாட், லுக் அட் திஸ்... என வர்ணனையாளர்கள் ஒவ்வொருமுறையும் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை சிலாகிக்கின்றனர். எப்படி இவரால் கால்களை நகர்த்தாமல் இருந்த இடத்தில் இருந்தே மணிக்கட்டை மட்டுமே சுழற்றி, 140 கி.மீ வேகத்தில் வரும் பந்தை ஸ்டேடியத்துக்கு வெளியே அனுப்ப முடிகிறது. அதுதான் தோனி, அதுதான் ஹெலிகாப்டர் ஷாட். 

இதோ அந்த ஷாட் பற்றிய டைம்லைன்! 

பெயர் வந்தது எப்படி?
பேட்டானது காற்றில் குறைந்த பட்சம் 180 டிகிரி சுழன்று , பந்தை அடித்தால் அதற்குப் பெயர்தான்  !‛தி ஹெலிகாப்டர் ஷாட்!’ (ஹெலிகாப்டரின் இறக்கையைபோல் ஒரு சுற்று சுற்றும்).

ஆரம்பம்:
சச்சின் , இங்கிலாந்துக்கு எதிராக 2002-ல் துர்காமில்  டீப் மிட் விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து ஆரம்பித்து வைத்தார். இதுவே ஹெலிகாப்டர் ஷாட்டின் ஆரம்பம். 

இதை மேலும் மெருகேற்றினார் தோனி. 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக ஆண்டர்சன் பந்தில் இந்த ஷாட்டை அடித்து ரசிகர்களின் கைகளுக்கு அந்த பந்தையே பரிசளித்தார்.

ஹெலி காப்டர்ஷாட் அடித்தவர்கள்: 
பென் கட்டிங் ,
முகமது ஷேசாத், சச்சின் டெண்டுல்கர்,
விராட்கோலி, தோனி..

தோனியின் தனித்துவம்:
பந்து பிட்ச்சாகி முழுவதும் மேலே எழுவதற்குள், கை மணிக்கட்டில் முழு வேகத்தையும் செலுத்தி, பந்து பேட்டின் அடிப்பாகத்தில் படுமாறு பளிச்சென ஓங்கி ஒரு அறை. கால்களை நகர்த்தாமலேயே இருந்த இடத்தில் இருந்தபடியே அசுர வேகத்தில் அடிப்பார். விர்ர்ர்ர்ரென பறக்கும் அந்தப் பந்து டீப் மிட் விக்கெட் அல்லது லாங் ஆஃன் திசையில் இருக்கும் ஃபீல்டர்களைத் தாண்டி விழும். சில நேரங்களில் ரசிகர்களின் கைகளில், சில நேரங்களில் ஸ்டேடியத்துக்கு வெளியே...

விளம்பரம் : 
ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபலப்படுத்துவதற்காக  பெப்ஸி நிறுவனம்   "சேஞ் தி கேம் "  என்ற அடிப்படையில் விளம்பரங்களை வெளியிட்டது. இதில் தோனியின் "இறுக்கி பிடி முறுக்கி சுத்தி அடி "என்று பாடியது வைரல்.

மறக்க முடியாதவை & மிகவும் வைரல் ஆன ஷாட்கள் : 

ஐபிஎல் போட்டியின் போது லசித் மலிங்காவின் யார்க்கரில் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்த ஷாட்,

ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டியில் ஜேம்ஸ் பாக்னர் ஓவரில் அடித்த பந்து மைதானத்தையும் தாண்டிச்சென்றது, காரணம் அது ஹெலிகாப்டர் ஷாட். அடித்தவர் தோனி

 

 


டிரெண்டிங் @ விகடன்