இன்று 3வது ஒருநாள் போட்டி! #IndvsAus

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இந்தோரில் இன்று  நடைபெற உள்ளது. முதலில் மோதிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று  5 போட்டிகள் கொண்ட தொடரில்  2-௦ என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

india vs aus
 

பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என்று அனைத்திலும் பலமாக உள்ள இந்திய அணியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இப்போட்டியின் மூலம் தொடரை வெல்ல இந்திய அணியும், போட்டியை வென்று இத்தொடரில்   தங்கள்  முதல் வெற்றியை பதிவுசெய்ய ஆஸ்திரேலிய அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்று தெரிகிறது. கடைசியாக இதே மைதானத்தில் தென்னாபிரிக்க அணியுடன் மோதிய போது, டோனியின் அபார ஆட்டத்தால்  22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தோர் ஹோல்கர் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!