வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (24/09/2017)

கடைசி தொடர்பு:21:25 (24/09/2017)

அதிரடி காட்டிய பாண்டியா...அசத்தல் வெற்றி பெற்ற இந்தியா... தொடரையும் கைப்பற்றியது! #IndvsAus #LiveUpdate

* மேட்ச்சை ஃபினிஷ் செய்தார் பாண்டே... இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றியது இந்தியா.

* சிறப்பான விளையாடிய பாண்டியா 78 ரன்களில் வெளியேறினார்.

* ஸ்டோனிஸ் வீசிய 45-வது ஓவர் இந்தியாவுக்கு பம்பர் பரிசாக கிடைத்துள்ளது. பாண்டியா, பாண்டே இருவரும் தலா இரண்டு ஃபோர்களை விரட்டினர்.

* விக்கெட்டுகள் ஒருபக்கம் சீரான இடைவெளியில் விழுந்தாலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார் பாண்டியா. 45 பந்துகளில் அவர் அரைசதம் அடித்துள்ளார்.

பாண்டியா

* கேதர் ஜாதவ் 2 ரன்களில் அவுட் ஆனார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

* கோலி அவுட். அகர் பந்தில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து அவர், 28 ரன்களில் வெளியேறினார். 

* இந்திய அணி 200 ரன்களைக் கடந்துள்ளது.  கோலி மற்றும் பாண்டியா நிதானமாக விளையாடி வருகின்றனர்.

* ரஹானேவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியுள்ளார். கமின்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி 70 ரன்களில் வெளியேறினார்.

* சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் ஷர்மா 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

* மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானேவும் அரைசதம் அடித்துள்ளார்.

ரஹானே

 

* இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் - ரஹானே பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியுள்ளது.

* ரோஹித் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 42 பந்துகளில் அவர் அரைசதம் விளாசியுள்ளார். அதில் நான்கு சிக்ஸர்கள் அடக்கம்.

* ஆஸ்திரேலிய அணியைப் போலவே இந்திய அணிக்கும், சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் ரஹானே ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரோஹித் ஷர்மா அதிராடியாக ஆடி வருகிறார். 11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா மூன்று சிக்ஸர்களுடன், 36 பந்துகளில் 43 ரன்கள் குவித்துள்ளார். ரஹானே 28 ரன்கள் எடுத்துள்ளார்.

ரோஹித் ஷர்மா

 

* 50 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அந்த அணியின் ரன்ரேட், இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சால் கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய அணியில் பும்ரா, குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். சாஹல் மற்றும் பாண்டியா தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சற்று நேரத்தில் களமிறங்க உள்ளது.

இந்திய அணி

* பும்ராவின் பந்து வீச்சில் அடுத்த விக்கெட். இம்முறை பவுண்ட்ரி லைனில் மணிஷ் பாண்டேவின் அசத்தலான கேட்ச்சால், ஹேண்ட் கோம் பெவிலியன் திரும்பினார்.

* ஆஸி அணியின் டி.எம்.ஹெட், பும்ராவின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

* மேக்ஸ்வெல் இரண்டாவது ஒருநாள் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் தோனியிடம் ஸ்டம்பிங் ஆகி வெளியேறியுள்ளார். இந்த முறை சாஹல் விக்கெட் எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அவுட் ஆகியுள்ளார். அவர் 63 எடுத்து பெவிலியன் திரும்பியுள்ளார். குல்தீப் யாதவே ஸ்மித்தின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

* அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் 124 ரன்களில் அவுட் ஆகியுள்ளார். குல்தீவ் யாதவ், ஃபின்ச்சின் விக்கெட்டை கைப்பற்றி மெகா பார்ட்னர்ஷிப்பை உடைத்துள்ளார்.

ஃபின்ச்

* ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அரைசதம் அடித்துள்ளார். இந்தத் தொடரில் மட்டும் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இது. 

ஸ்மித்

* ஆஸ்திரேலிய அணி 200 ரன்களைக் கடந்துள்ளது. ஃபின்ச்சும், ஸ்மித்தும் ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். சற்று முன்வரை அந்த அணி 37 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் எடுத்துள்ளது.

* அதிரடியாக ஆடிய ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் சதம் அடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 8-வது சதம். சதம் அடித்த அடுத்த பந்தை, சிக்ஸருக்கு அனுப்பினார்.

* ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து வெளியேறி, பழைய பன்னீர்செல்வமாக விளையாடி வருகிறது. ஃபின்ச் - ஸ்மித் ஜோடியின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்துள்ளது. அந்த அணி 30 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் எடுத்துள்ளது 

* ஆஸ்திரேலிய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் அரைசதம் எடுத்துள்ளார். 21.2 ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இது அவருக்கு 17-வது அரைசதம்.

ஃபின்ச்

* ஆஸ்திரேலிய அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. பாண்டியாவின் பந்தில், வார்னர் போல்ட் ஆகினார். வார்னர் 42 ரன்கள் எடுத்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி 16 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது. 

வார்னர்

* ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின்ச், வார்னர் நிதானமாக விளையாடி வருகின்றனர். 12 ஓவர்கள் முடிவில் அந்த அணி 55 ரன்கள் எடுத்துள்ளது. ஃபின்ச் 23, வார்னர் 28 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

* இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த அணியின் ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரர் ஃபின்ச் களமிறங்கியுள்ளார். இது அந்த அணிக்கு சற்று பலமாக இருக்கும். அதேபோல, விக்கெட் கீப்பர் மேத்தீவ் வேடுக்கு பதிலாக ஹேண்ட்ஸ் கோம் களமிறங்கியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி சற்றுமுன் இந்தோரில் தொடங்கியது.

india vs australia
 

முதல்  இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று  ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில்  2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எனவே, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்க உள்ளது. இந்தியா பந்துவீச உள்ளது.  இப்போட்டியில் இந்தியா வென்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதால், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க