'ஆஸியை ப்ளூ வாஷ் செய்யுங்கள்' - சச்சின் நெகிழ்ச்சி ட்வீட்!

'ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 'ப்ளூ வாஷ்' செய்யுங்கள்' என்று சச்சின் ட்வீட் செய்துள்ளார்.

சச்சின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்தூர் மைதானத்தில், இந்தியாவுக்கு தோல்வியே இல்லை என்பது இந்தப் போட்டியிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய அணி தொடர்ந்து பெற்ற 9-வது வெற்றி இது. இதன்மூலம் ஐ.சி.சி ஒருநாள் தர வரிசையில், முதல் இடத்துக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில், இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்தது. மணீஷ் பாண்டேவின் வாவ் கேட்ச், ரோஹித், ரஹானேவின் சிறப்பான தொடக்கம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையைத் தட்டிச்சென்ற ரோஹித், பாண்டியாவின் அதிரடி, சரவெடி ஆட்டம். மூன்று போட்டிகளில் இரண்டாவது முறையாக ஆட்டநாயகன் விருதுபெற்ற பாண்டியா, தொடர்ந்து 9-வது வெற்றிபெற்ற இந்தியா என்று அடுக்கிக்கொண்டேபோகலாம்.

இந்திய அணி தொடரை வென்றபோதும், மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் வென்று, ஆஸியை ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வெற்றிபெறுவது 'மென் இன் ப்ளூ'-வுக்கு மிகவும் எளிதாகிவிட்டது.  தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வியைத் துரத்தியது பெரிய சாதனை. இதை 11 என்றாக்கி, தொடரை 'ப்ளூ வாஷ்' செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!