நான்காவது வீரராகக் களமிறங்கிய பாண்ட்யா - சீக்ரெட் உடைத்த கோலி! | Kohli speaks about Pandya

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (25/09/2017)

கடைசி தொடர்பு:10:20 (25/09/2017)

நான்காவது வீரராகக் களமிறங்கிய பாண்ட்யா - சீக்ரெட் உடைத்த கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியையும் கைப்பற்றி, ஹாட்ரிக் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. மேலும், இந்தத் தொடரையும் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து கிடைக்கும் 9-வது வெற்றி இது. இந்த வெற்றிமூலம் இந்திய அணி, ஐ.சி.சி தர வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

கோலி

இந்த மூன்றாவது போட்டியில், இந்திய அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தூரில் விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. தொடர்ந்து 9 வெற்றிகளைப் பெற்றதன்மூலம், டிராவிட் மற்றும் தோனியின் சாதனைகளை கோலி சமன்செய்துள்ளார். முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில், தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, கைப்பற்றிய முதல் கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். அதேபோல, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். 

இந்நிலையில், போட்டிகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் கோலி, "இந்த வெற்றியால், நாங்கள் மிகவும் திருப்தியடைந்துள்ளோம். பாண்ட்யாதான் இந்திய அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம். அவரால், பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று அனைத்து ஏரியாவிலும் அசத்த முடியும். அவரைப் போன்ற ஒருவர்தான் இந்திய அணிக்கு வேண்டும். இந்திய அணிக்குக் கிடைத்த சொத்து அவர். 

பாண்ட்யாவை 4-வது டவுனில் களமிறக்கலாம் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான் ஐடியா கொடுத்தார். சுழற்பந்துவீச்சை அடித்து நொறுக்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று கூறினார்.