தொடரிலிருந்து விலகினார் ஆஸி பௌலர்!

கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகார் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா


இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒருநாள் போட்டி, மூன்று டி20 போட்டிகளைக்கொண்ட கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த ஒரு நாள் போட்டிக்கான தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துத் தொடரையும் கைப்பற்றியது. இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது பவுண்டரி நோக்கி சென்ற பந்தை அகார் வேகமாகத் தடுத்தார். அப்போது அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு, எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த காரணத்தினால் அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். மீதமிருக்கும் இரண்டு போட்டியில் இவருக்கு பதிலாக எந்த ஒரு வீரரையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்கவில்லை. இவர் முதல் போட்டியில் விளையாடவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தலா ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். மூன்றாவது ஒருநாள் போட்டியில் இவரது பந்துவீச்சில்தான் ஹர்திக் பாண்டியா ரன் மழை பொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!