’மீண்டும் அணிக்குத் திரும்புங்கள்’;முன்னாள் ஆஸ்திரேலிய வீரரை அழைக்கும் ஹர்பஜன் சிங்

ஸ்திரேலிய அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மட்டும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது வரை மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில் மூன்று போட்டிகளையும் வென்று இந்தியா ஏற்கெனவே தொடரைக் கைபற்றிவிட்டது. 

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளில் பல முறை வாக்கு வாதங்கள், கிண்டல், கேலி முதலியன மிக சாதாரணமாக நடைபெறும். ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைச் செய்து வந்தனர். இதில் சைமண்ட்ஸ் ஹர்பஜன் சிங் இடையே நடந்த கிண்டல் கேலிகளை கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். 

harbajan

ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி குறித்து தனது கருத்தினைப் பதிவு செய்து வந்தார். அதே போன்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், மைகேல் கிளார்க் தனது ஓய்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். 

அந்த ட்வீட்டில், “மீண்டும் நீங்கள் அணிக்குத் திரும்ப வேண்டும். ஆஸ்திரேலியா அணியில் தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை” எனக் கூறியுள்ளார். 

இணையதள பேட்டி ஒன்றில் ஹர்பஜன் சிங், “ஆஸ்திரேலிய அணி தற்போது விளையாடுவதை பார்த்தால் இலங்கை அணி மஞ்சள் உடை அணிந்து விளையடுவது போல் உள்ளது” எனக் கூறினார். மேலும் நான் எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் நிழல் அளவிற்கு கூட தற்போதைய அணி விளையாட வில்லை எனக் குறிப்பிட்டார். 

இதற்கு கிளார்க் ட்விட்டரில் “என்னுடைய பழைய கால்கள் தற்போது குளிரூட்டப்பட்ட வர்ணனை அறையை அனுபவித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி சில முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என பதிலளித்துள்ளார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!